போலந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்த பழங்கள் அந்நாட்டின் தேசியத் தாவரப் பாதுகாப்பு அமைப்பில் (NPPO) பதிவு செய்யப் பட்ட பழத்தோட்டங்களில் இருந்து பெறப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.
சான்றிதழில் அகாலிடஸ் தடுப்பூசி (அவுரிநெல்லி மொட்டுப் பூச்சிகள்) மற்றும் சூடோமோனாஸ் விரிடிஃப்லாவா (மலர் கருகல் நோய்) ஆகியவற்றில் இருந்து விடுபட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்ற அறிவிப்பு அதில் இடம் பெற்றிக்க வேண்டும்.
NPPO என்பது பூச்சிகளின் பெரும் பரவலைத் தடுப்பதற்காகவும் வேளாண்மையினைப் பாதுகாப்பதற்காகவும் செயல்படும் ஒரு தேசிய அளவிலான நிறுவனமாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கீழ் உள்ள சர்வதேச தாவரப் பாதுகாப்பு உடன்படிக்கையில் (IPPC) இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவில் அவுரிநெல்லி சந்தை தற்போது சுமார் 60 மில்லியன் டாலர் மதிப்பினைக் கொண்டுள்ளது.