ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது, தனது போலரிஸ் டான் விண்வெளிப் பயணத் திட்டத்தில் அமெரிக்க கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 1,400 கிலோமீட்டர்கள் மேலே வணிக ரீதியானப் பயணத்திற்காக முன்னெப்போதும் நிர்ணயிக்கப்படாத சுற்றுப்பாதை உயரத்தை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஜெமினி 11 விண்வெளிப் பயணத் திட்டத்தின் சாதனையை முறியடிக்கும் மற்றும் அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு மிக உயர்ந்த புவி சுற்றுப்பாதையில் மனிதர்கள் பயணம் மேற்கொண்ட சாதனையும் இது குறிக்கிறது.
இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தில், டிராகன் விண்வெளிக் கலப் பெட்டகத்தில் காற்றடைப்பு நிலை இல்லாதது போன்ற தனித்துவமான சவால்கள் உள்ளன.
இது உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் விண்வெளி நடை பயணத்தினை மேற்கொள்வதற்கான இந்த நிறுவனத்தின் முயற்சி ஆகும்.
இந்த 20 நிமிட விண்வெளி நடை பயணமானது, அப்பயணத்தின் மூன்றாவது நாளில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது பூமியில் இருந்து 434 மைல் (700 கிமீ) உயரத்தில் நடைபெறும்.