TNPSC Thervupettagam

போலரிஸ் டான் ஆய்வுத் திட்டம்

August 31 , 2024 84 days 116 0
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஆனது, தனது போலரிஸ் டான் விண்வெளிப் பயணத் திட்டத்தில்  அமெரிக்க கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் மற்றும் மூன்று பேரை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது.
  • பூமியின் மேற்பரப்பிலிருந்து 1,400 கிலோமீட்டர்கள் மேலே வணிக ரீதியானப் பயணத்திற்காக முன்னெப்போதும் நிர்ணயிக்கப்படாத சுற்றுப்பாதை உயரத்தை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஜெமினி 11 விண்வெளிப் பயணத் திட்டத்தின் சாதனையை முறியடிக்கும் மற்றும் அப்பல்லோ திட்டத்திற்குப் பிறகு மிக உயர்ந்த புவி சுற்றுப்பாதையில் மனிதர்கள் பயணம் மேற்கொண்ட சாதனையும் இது குறிக்கிறது.
  • இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தில், டிராகன் விண்வெளிக் கலப் பெட்டகத்தில் காற்றடைப்பு  நிலை இல்லாதது போன்ற தனித்துவமான சவால்கள் உள்ளன.
  • இது உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் விண்வெளி நடை பயணத்தினை மேற்கொள்வதற்கான இந்த நிறுவனத்தின் முயற்சி ஆகும்.
  • இந்த 20 நிமிட விண்வெளி நடை பயணமானது, அப்பயணத்தின் மூன்றாவது நாளில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
  • இது பூமியில் இருந்து 434 மைல் (700 கிமீ) உயரத்தில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்