TNPSC Thervupettagam
September 20 , 2024 7 days 35 0
  • தனியார் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய பயணமான போலரிஸ் டான் திட்டமானது, புளோரிடாவின் கடலில் இறங்கிய நிகழ்வுடன் வெற்றிகரமாக முடிவடைந்தது.
  • இந்தப் பயணமானது 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்கள் கொண்ட விண்கலம் அடைந்த மிகவும் உயர்ந்த உயரத்தையும், முதல் வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தையும் குறித்தது.
  • இந்த விண்கலம் சுமார் 870 மைல் உயரத்திற்குப் பயணித்தது.
  • இது சர்வதேச விண்வெளி நிலையம் பயணிக்கும் உயரத்தை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.
  • சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ விண் திட்ட பயணத்திற்குப் பிறகு பூமியிலிருந்து மனிதர்கள் பயணித்த அதிகபட்ச தூரம் இதுவாகும்.
  • வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளி நடைப் பயணத்தின் போது, ​​ஐசக்மேன் மற்றும் கில்லிஸ் ஆகியோர் ஸ்பேஸ்எக்ஸின் சில புதிய விண்வெளி உடைகளைச் சோதித்து, அவற்றின் செயல்பாடு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்