TNPSC Thervupettagam

போலி கடவுச்சீட்டு மற்றும் போலி நாணயத் தாள்களை (கள்ளநோட்டு) தடுத்து நிறுத்துவதற்கான மை

December 29 , 2019 1667 days 568 0
  • கடவுச்சீட்டுகளைப் போலியாக அச்சிடுதல் மற்றும் நாணயத் தாள்களை கள்ள நோட்டாக மாற்றுதல் போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) மற்றும் தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை இணைந்து மை ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • ஒற்றைத் தூண்டு இரட்டை உமிழ்வு கொண்ட ஒளிரும் நிறமியின் அடிப்படையில் இந்த மை தயாரிக்கப் பட்டுள்ளது.
  • இது உடன்ஒளிர்வு மற்றும் நின்றொளிர்வு ஆகிய நிகழ்வுகளின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • தற்போது, நாணயத் தாள்கள் அலைநீளத்தின் உமிழ்வுடன் ஒரே ஒரு நிறத்தை மட்டுமே காண்பிக்கின்றன.
  • இருப்பினும், விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த மையானது பணத் தாள்கள் அச்சிடப்பட்ட பிறகு நிறமி நிறத்தில் மாற்றங்களைக் கொண்டுள்ளது.
  • சுற்றுப்புற ஒளியில் இந்த மையானது வெள்ளை நிறத்தைக் காட்டுகின்றது.
  • இந்த மையானது புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது, அது சிவப்பு நிறமாக மாறும். புற ஊதா மூலத்தை அணைக்கும் போது அது பச்சை நிறமாக மாறும்.

உடன்ஒளிர்வு மற்றும் நின்றொளிர்வு

  • உடன்ஒளிர்வு மற்றும் நின்றொளிர்வு ஆகிய இரண்டு நிகழ்வுகளின் போதும் கதிர்வீச்சானது மின்காந்தமானதாகவும் தன்னிச்சையானதாகவும் விளங்குகின்றது.
  • உடன்ஒளிர்வின் போது மூலத்தை அணைத்த பின்னர் கதிர்வீச்சானது நிறுத்தப்படும்.
  • மறுபுறம், நின்றொளிர்வின் போது, ஒளிர்வானது சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்து நீடிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்