போலியான 500 ரூபாய்த் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு
June 4 , 2023 539 days 301 0
2023 ஆம் நிதியாண்டில் சுமார் 91,110 போலியான 500 ரூபாய்த் தாள்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
2022-23 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியில் 4.6 சதவிகிதம் போலி இந்திய ரூபாய்த் தாள்களும், மற்ற வங்கிகளில் 95.4 சதவிகித போலியான இந்திய ரூபாய்த் தாள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதே ஆண்டில் 78,699 போலியான 100 ரூபாய்த் தாள்களும் மற்றும் 806 போலியான 2000 ரூபாய்த் தாள்களும் கண்டறியப் பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.