குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி போஷன் அபியான் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கும். குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச் சத்தின்மையை ஒழிப்பதற்கான மாநிலம் தழுவிய ஒரு திட்டம் இது ஆகும்.
ரூ.270 கோடியில் மதிப்பிடப்பட்ட, 14-18 வயதிற்குட்பட்ட பெண்களிடையே நிலவும் ஊட்டச் சத்தின்மையை ஒழிப்பதற்கான பூர்ணா (PURNA) திட்டத்தினையும் இவர் தொடங்கி வைத்தார்.
பூர்ணா என்பது (PURNA - Prevention of Under Nutrition & Reduction of Nutritional Anaemia) ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இளம் பருவ பெண்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டு இரத்த சோகையினை தடுத்தல்.
தேசிய அளவிலான போஷன் திட்டம் மார்ச் 8, 2018 அன்று ராஜஸ்தானில் பிரதம மந்திரியால் தொடங்கி வைக்கப்பட்டது.