TNPSC Thervupettagam

போஷான் திட்டம்

April 26 , 2018 2278 days 3661 0
  • போஷான் அபியான் திட்டத்தின் (Poshan Abhiyaan) கீழ் ஊட்டச்சத்து அளவீடுகள் (nutrition parameter) அடிப்படையில், நிதி ஆயோக் அமைப்பானது இந்திய மாநிலங்களை தரவரிசைப்படுத்த உள்ளது.
  • போஷான் அபியான் திட்டத்தின் கீழான இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் மீதான தேசியக் குழுவின் (National Council on India's Nutrition Challenges) முதல் சந்திப்பு அண்மையில் நிதி ஆயோக் அமைப்பால் நடத்தப்பட்டது.
  • அமைச்சரகங்களிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு கூட்டத்தின் மூலம் நாட்டின் முக்கி, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்கு நிதி ஆயோக் அமைப்பினால் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஊட்டச்சத்து நிலையினைப் பற்றி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இக்குழு பிரதமரிடம் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
  • போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மகப்பேறுடைய பெண்களுக்கு தரமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
  • போஷான் அபியான் திட்டமானது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டினையும், வளர்ச்சி குன்றலையும். இளங்குழந்தைகள், பெண்கள் மற்றும் இளம் பெண் குழந்தைகளிடையே இரத்த சோகையை குறைக்கவும், பிறப்பு எடை குறைவை குறைக்கவும் இலக்கினைக் கொண்டுள்ளது.
  • குழந்தைகளிடத்தில் 80 சதவீத மூளை வளர்ச்சியானது அவர்களுடைய வாழ்வின் முதல் 1000 நாட்களில் ஏற்படுவதால், குழந்தைகளுடைய இந்த முக்கிய கால கட்டத்தின் மீது போஷான் அபியான் திட்டம் அதிக கவனத்தை செலுத்த உள்ளது..
  • 0 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடத்தில் வளர்ச்சி குன்றல் (stunting) நிலையினை தற்போதைய4 சதவீதம் என்ற அளவிலிருந்து 2022-ல் 25 சதவீதம் என்ற அளவுக்கு குறைப்பதற்கு இத்திட்டம் இலக்கினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்