1924 ஆம் ஆண்டில், சத்யேந்திர நாத் போஸ், ஃபோட்டான் (ஒளியின் துகள்கள்) தொகுப்புகளின் செயல்பாடுகள் பற்றி அறிவதற்கான சரியான சமன்பாடுகளின் ஒரு தொகுப்பைக் கண்டுபிடித்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அதனை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து அதனை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார்.
இந்த ஆண்டானது போஸ் அவர்களின் கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடனான அவரது ஒத்துழைப்பு இறுதியில் B-E புள்ளிவிவரங்களை முன் வைக்க வழி வகுத்தது.
கிடைக்கக் கூடிய ஆற்றல் நிலைகளில் துகள்கள் எவ்வாறு தங்களைப் பரவச் செய்கின்றன என்பதை இது விளக்குகிறது.
B-E புள்ளியியல் கொள்கைக்கு இணக்கமான வகையிலான துகள்கள் ஆனது S.N போஸ் அவர்களின் நினைவாக "போசான்ஸ்" என்று குறிப்பிடப்படுகின்றன.