TNPSC Thervupettagam

போஸ்னியாவின் செவ்டலிங்கா

January 2 , 2025 6 days 90 0
  • செவ்டலிங்கா என்பது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைமுறையில் உள்ள பாரம்பரிய நகர்ப்புறப் பாடலின் ஒரு வடிவமாகும்.
  • செவ்டலிங்காத்தின் முக்கியப் பயன்பாடு கதைச் சொல்வது ஆகும்.
  • இது இரு பாலினத்தவர் மற்றும் அனைத்துப் பின்னணியில் உள்ள தொழில்முறை மற்றும் ஆரம்ப நிலைக் கலைஞர்களாலும் மேற்கொள்ளப்படும் கலை வடிவமாகும், மேலும், இது மேடை சார்ந்த நாட்டுப்புறக் கதைகளின் முக்கியப் பகுதியாகும்.
  • இந்தக் கலையானது பெரும்பாலும் குடும்பங்களுக்குள் பரப்பப்படுகிறது என்பதோடு, குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் பெற்றோர்களை மிக நன்கு பின்பற்றுதல் மூலம் அதனைக் கற்றுக் கொண்டு, பின்னர் காலப்போக்கில் தனிப்பட்ட மாறுபாடுகளைச் அதில் சேர்க்கிறார்கள்.
  • ​​இது யுனெஸ்கோ அமைப்பின் தொட்டுணர முடியாத கலாச்சாரப் பாரம்பரியத்தின் தேசியப் பட்டியலில் தற்போது சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்