செங்கடலில் பாதுகாப்பு நிலையைப் பேணுவதற்காக வேண்டி அமெரிக்க அரசானது, ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
ஐக்கியப் பேரரசு, பஹ்ரைன், கனடா, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, செஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பன்னாட்டுப் பாதுகாப்பு முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
செங்கடல் ஆனது, சர்வதேச வர்த்தகத்தினை மேற்கொள்வதற்கு அவசியமான தடையற்றப் போக்குவரத்து மற்றும் முக்கிய வணிக வழித்தடம் ஆக விளங்கும் ஒரு முக்கிய நீர்வழிப் பாதையாகும்.
சமீபத்தில், ஏமன் நாட்டினைச் சேர்ந்த ஹவுதி போராளிகள் வணிக கப்பல்களை 12 முறை தாக்கியுள்ளனர் அல்லது கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக நவம்பர் மாதத்தில், ஹவுதி போராளிகள், கேலக்ஸி லீடர் என்ற இந்தியக் கப்பலை கடத்திச் சென்றனர்.