TNPSC Thervupettagam

ப்ரீடோமனிட் மாத்திரைகள் – மருந்து எதிர்ப்பு காசநோய் சிகிச்சை

August 17 , 2019 1928 days 645 0
  • மிகக் கொடுமையான மருந்து எதிர்ப்பு காச நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்காக ப்ரீடோமனிட் மாத்திரைகளைப் பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மிகக் கொடிய மருந்து எதிர்ப்பு காச நோய் பாதிக்கப்பட்ட 107 நோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி பெடக்குயிலின் மற்றும் லைன்சோலிட் ஆகியவற்றுடன் இணைத்து ப்ரீடோமனிட் மாத்திரைகள் கொடுக்கப்பட்டதில் 6 மாதங்களுக்குப் பின்பு அவர்களில் 89 சதவிகிதம் நபர்களை இந்த மருந்துகள் குணப்படுத்தியுள்ளன.
  • மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மருந்துகளும் ஒன்று சேர்ந்து BPaL பிரிவு என்று அழைக்கப்படுகின்றது.
  • புதிய சிகிச்சையின் காரணமாக, ஒரு நாளைக்கு 30 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் காசநோய் பாதித்துள்ளவர்கள் தற்பொழுது ஒரு நாளைக்கு 5 மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் போதும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்