TNPSC Thervupettagam
July 23 , 2018 2188 days 701 0
  • முழு சந்திர கிரகணம் ஜூலை 27 இரவு மற்றும் ஜூலை 28-ன் காலை நேரத்தில் ஏற்பட உள்ளது.
  • ஜூலை 27-ல் ஏற்பட இருக்கும் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளில் மிகவும் நீளமான கிரகணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழு சந்திர கிரகணம்:
  • முழு சந்திர கிரணத்தின் போது சூரிய ஒளி நிலவின் மேற்பரப்பில் விழாது மற்றும் நிலவு முழுவதும் பூமியின் நிழலில் இருக்கும். இந்த நிலையில் பூமியின் துணைக்கோள் சிவப்பு நிறத்தில் தென்படும்.
  • பூமியின் மேற்பரப்பிலிருந்து வரும் சூரிய ஒளி நிலவின் மேற்பகுதியில் படும் நேரத்தில் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது நிலவு சிவப்பு நிறத்தில் தெரியும்.
  • காரணம்: பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியின் சிறிய அலைநீளம் கொண்ட நீல மற்றும் பச்சை நிறக்கதிர்களை சிதறடிக்க விடுகின்றது. அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு கதிர்கள் மட்டுமே துணைக்கோளின் மேற்பகுதியில் செல்ல வளிமண்டலத்தினால் அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்