ஒரு பில்லியனரான ஜெஃப் பெசோஸின் விண்வெளி சார் நிறுவனமான ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனம் அதன் 10வது விண்வெளிச் சுற்றுலாத் திட்ட நோக்கிலான கலத்தினை விண்ணில் ஏவியது.
இது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துஷார் மேத்தா உட்பட ஆறு பயணிகளை விண்வெளிக்கு அனுப்பியது.
நியூ ஷெப்பர்ட் (NS) என்ற விண்கலத்தில் பயணிக்கும் ஆறு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவிற்கு "Perfect 10" என்று பெயரிட்டுள்ளனர்.
கோபி தோட்டகுராவுக்குப் பிறகு ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் கலத்தில் பயணித்த இரண்டாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மேத்தா ஆவார்.