தேசிய அளவிலான அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம் குறித்த ப்ளூ லீடர்ஸ் குழுவின் உயர்நிலை நிகழ்வு ஆனது பெல்ஜியம் நகரில் நடைபெற்றது.
மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து உயர் கடல்களைப் (குறிப்பிட்ட வரம்பிற்கு அப்பாற்பட்ட) பாதுகாப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை அங்கீகரிக்குமாறு உறுப்பினர் நாடுகளை இக்குழு வலியுறுத்துகிறது.
பெல்ஜியம், கேப் வெர்டே, கிரீஸ், மொனாக்கோ, நைஜீரியா, நார்வே மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற நாடுகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டப் பகுதிகளில் (BBNJ ஒப்பந்தம்) கடல் வாழ் உயிரியல் பன்முகத் தன்மையின் வளங்காப்பு மற்றும் நிலையான பயன்பாட்டிற்கான ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு இந்தக் குழுவின் உறுப்பினர் நாடுகள் ஒப்புக் கொண்ட நிலையில், இது இரண்டு மாதங்களுக்குப் பிறகு முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இதுவரையில் 88 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதையடுத்து, சிலி மற்றும் பலாவ் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இதுவரை ஒப்புதல் அளித்துள்ளன.
BBNJ ஒப்பந்தமானது, குறைந்தபட்சமாக 60 நாடுகள் இதற்கு ஒப்புதல் அளிக்கும் போது "அமுலுக்கு வரும்".