TNPSC Thervupettagam

ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு

July 21 , 2019 1860 days 585 0
  • உலகின் மிகப்பெரிய செல்வந்தராக அமேசானின் தலைவரான ஜெப் பெசோஸ் தொடர்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • பில் கேட்ஸ் 107 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ் ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டில் ஒருபோதும் இரண்டாவது இடத்திற்குக் கீழே சென்றதில்லை. ஆனால்
  • தற்பொழுது இவர் LVMH நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவரால் 3-வது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளார்.
  • பில் கேட்ஸின் கொடைப் பண்பு சார்ந்த முயற்சிகள் இந்தத் தரவரிசையில் இவர் பின்தங்கியதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
  • பில் கேட்ஸ் 35 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
  • செல்வமிக்க இந்தியரான முகேஷ் அம்பானி இந்தத் தரவரிசையில் 51.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் 13வது இடத்தில் உள்ளார்.
  • அஸிம் பிரேம்ஜி என்பவர் இரண்டாவது செல்வமிக்க இந்தியராக இந்தத் தரவரிசையில் 20.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 48-வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து இந்தத் தரவரிசையில் சிவ் நாடார் 92-வது இடத்திலும் உதய் கோட்டக் 96-வது இடத்திலும் உள்ளனர்.

இதுபற்றி

  • ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீடு என்பது 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தால் வெளியிடப்படும் உலக செல்வந்தர்களின் தினசரித் தரவரிசையாகும்.
  • இது உலகில் உள்ள 500 செல்வமிக்க நபர்களைப் பட்டியலிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்