மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கின்ராரா அகாடெமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை T-20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக மகளிர் ஆசிய T20 கோப்பையை வென்றுள்ளது.
தன்னுடைய தொடர்ந்த சீரான பேட்டிங் காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக (Player of the Tournament) அறிவிக்கப்பட்டுள்ளார்.