TNPSC Thervupettagam

மகளிர் ஓட்டுனர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சீருடை

February 21 , 2025 10 hrs 0 min 43 0
  • தமிழக அரசானது 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வீதிகளில் திருத்தம் செய்ய முன்வந்துள்ளது.
  • ஒரு வரைவு திருத்தத்தின்படி, ‘இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனம்’ என்பது சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்கள் சேவைத் திட்டத்தின் கீழ் சேவையாற்றும் மகளிர் ஓட்டுனர்களுக்கு என்று சொந்தமான மற்றும் மகளிரால் இயக்கப்படும் ஒரு மூன்று சக்கர வாகனங்கள் ஆகும் என்ற நிலையில் இவர்கள் இனி இளஞ்சிவப்பு நிறச் சீருடையை அணிவர்.
  • இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்கள் ஆனது, அவசர காலங்களில் விரைவான எதிர் நடவடிக்கையினை உறுதி செய்வதற்காக என்று காவல்துறை உதவி எண்ணுடன் இணைக்கப்பட்ட GPS / VLTD வசதியுடன் இணைக்கப்படும்.
  • கடந்த ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனச் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும், 200 மகளிர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்