TNPSC Thervupettagam

மகாகவி தினம்

September 15 , 2021 1172 days 1658 0
  • புரட்சிகரமான கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமான செப்டம்பர் 11 அன்று 'மகாகவி' தினமாக கொண்டாடப் படும்.
  • பாரதியின் 100வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார்.
  • பாரதியின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பானது "மனத்தில் உறுதி வேண்டும்" என்ற தலைப்பின் கீழ் புத்தகமாக வெளியிடப்படும்.
  • உலகத் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து 'பாரெங்கும் பாரதி' (எல்லா இடங்களிலும் பாரதி) என்ற தலைப்பில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.
  • பாரதியாரின் புத்தகங்களைத் தொகுக்க 'பாரதியால்' எனும் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்படும்.
  • ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் பெண்கள் வாழ்வாதாரப் பணிக்கு பாரதியாரின் பெயரிடப்படும்.
  • "பாரதி இளம் கவிஞர் விருது'' என்ற ஒரு விருது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதைப் போட்டி மூலம் வழங்கப்படும்.
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் பாரதி வசித்த வீட்டைப் பராமரிக்க நிதி உதவி வழங்கப்படும்.
  • வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது பாரதியின் நினைவாக தமிழ் ஆய்வுகளுக்கான ஒரு இருக்கையைப் பெறும் என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
  • மேலும், "உலகின் பழமையான மொழியான தமிழ் மொழிக்குச் சொந்தமான நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது" என்றும் மோடி கூறினார்.

பாரதி பற்றி

  • 1917 ஆண்டு  ரஷ்யப் புரட்சி அல்லது போல்ஷிவிக் புரட்சியின் பெருமையைப் பாடிய முதல் ஆசியக் கவிஞர் பாரதி ஆவார்.
  • 1908 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சுப்பிரமணிய பாரதி புதுச்சேரிக்கு (அப்போது ஒரு பிரெஞ்சு காலனி) தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.
  • பாரதி சுதேசமித்ரன் செய்தித்தாளில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
  • பாரதி 1921 செப்டம்பர் 11 அன்று சென்னையில் காலமானார்.
  • பாரதி தனது கடைசி உரையை ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையம் நூலகத்தில் நிகழ்த்தினார்.
  • பாரதியின் கடைசி வருடங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டில் கழிந்தது.
  • முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்கள் பாரதியாரை முதலில் ‘மக்கள் கவி’ (மக்களின் கவிஞர்) என்று அழைத்தார்.
  • வா.ரா அவர்கள், எல்லாக் காலத்திலும் சிறந்த கவிஞரான "மகாகவி பாரதியார்" பற்றி ஓர் உன்னதமான தமிழ் சுயசரிதையினை எழுதினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்