பஞ்சாப் அரசாங்கமானது மாநிலத்தில் உள்ள சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மகாத்மா காந்தி சர்பத் விகாஷ் யோஜனா என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது அந்த்யோதயா கொள்கைகளின் வரிசையில் (அதாவது கடைசி நபரின் எழுச்சி) இருக்கும். மேலும் இது கிராமப்புறப் பகுதிகளில் வாழும் 18 ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் விதமாக நடைமுறைப் படுத்தப்படும்.
சமுதாயத்தில் சமூக, பொருளாதார ரீதியாக அல்லது உள ரீதியாக உதவுவதன் மூலம் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.