TNPSC Thervupettagam

மகாநதி நதிநீர் பிரச்சினை - தீர்ப்பாயம்

February 28 , 2018 2464 days 1282 0
  • மகாநதி நதியின் நீரை பகிர்ந்து கொள்வதில் ஒடிஸா மாநிலத்திற்கும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் இடையே நிலவும் பிரச்சினையை தீர்க்க நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் (Tribunal) ஒன்றை அமைப்பதற்கு மத்திய கேபினேட்  ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மகாநதி நதியின் குறுக்கே சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு தடுப்பணைகள் (Weirs) கட்டிவருவதை நிறுத்த வேண்டி, ஒடிஸா மாநிலம் தொடுத்த வழக்கில் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க தீர்ப்பாயம் ஒன்றை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.
  • மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை சட்டம் 1956-ன் படி அமைக்கப்படும் இத்தீர்ப்பாயத்தில் ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் இருப்பர்.
  • தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களை உச்சநீதி மன்றம் அல்லது நாட்டின் பிற உயர்நீதி மன்றங்களின் நீதிபதிகளிலிருந்து,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமிப்பார்.
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை சட்டம் 1956-ன் படி (Inter-State River Water Disputes -1956), அமைக்கப்படும் தீர்ப்பாயமானது தனது அறிக்கை மற்றும் முடிவை 3 ஆண்டுகளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த சமர்ப்பிப்புக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு மிகாத வண்ணம் நீட்டிப்பு செய்யலாம்.

மகாநதியைப் பற்றி

  • மகாநதி நதியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் சிஹாவா (Sihawa) மலைகளில் தோன்றுகின்றது.
  • சத்தீஸ்கர் மற்றும் ஒடிஸா வழியே பாய்ந்தோடி, வங்கக்கடலில் கலக்கின்றது.
  • மகாநதியின் கிளை நதிகள் (tributaries),
  1. இடக்கரை  துணைநதிகள் (left Bank Tributaries)
    • சியோநாத் (Seonath)
    • ஹஸ்தியோ (Hasdeo)
    • மண்ட் (Mand)
    • இப் (Ib)
  2. வடக்கரை துணைநதிகள் (Right Bank Tributaries)
    • ஓங் (Ong)
    • டெல் (Tel)
    • ஜோங்க் (Jonk)

  • உலகின் மிகவும் நீளமான அணையான ஹிராகுட் அணை  மகாநதியின் நதியின்  மேல் கட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்