TNPSC Thervupettagam

மகாரத்னா அந்தஸ்து

November 10 , 2019 1845 days 2137 0
  • மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சகம் அரசுக்குச்  சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மின்தொகுப்புக் கழகத்துக்கு 'மகாரத்னா' அந்தஸ்தை வழங்கியது.
  • இந்திய மின்தொகுப்புக் கழகம் ஆனது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய மின்சார ஆற்றல் பரிமாற்றப் பயன்பாட்டு நிறுவனமாகும்.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாளின் நிலவரப்படி, 10 மகாரத்னாக்கள், 14 நவரத்னாக்கள் மற்றும் 73 மினிரத்னாக்கள் இந்தியாவில் உள்ளன.

நன்மைகள்

  • 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கப் படும் இந்த விருது மூலமான அந்தஸ்து அந்த நிறுவனங்களுக்கு அதிகச் செயல்பாட்டு மற்றும் நிதிச் சுயாட்சியை வழங்கும்.
  • இது நிதி முடிவுகளை எடுக்க அந்த நிறுவனங்களின் வாரியங்களுக்கு சில மேம்பட்ட அதிகாரங்களை வழங்கும்.
  • அரசு மகாரத்னா நிறுவனத்தின் முதலீட்டு உச்சவரம்பை ரூ. 1,000 கோடி முதல் ரூ. 5,000 கோடியாக உயர்த்தி இருக்கின்றது.
  • இப்போது மகாரத்னா நிறுவனங்கள் தங்கள் நிகர மதிப்பில் 15 சதவீதம் வரை ஒரு திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து முடிவு எடுக்கலாம்.

தகுதி

  • மூன்று வருடங்கள் சராசரியாக ஆண்டு நிகர லாபம் ரூ. 2500 கோடி, அல்லது
  • சராசரி ஆண்டு நிகர மதிப்பு ரூ. 3 வருடங்களுக்கு 10,000 கோடி, அல்லது
  • சராசரி ஆண்டு வருவாய் ரூ. 3 ஆண்டுகளுக்கு 20,000 கோடி ரூபாய் (முன்பு பரிந்துரைக்கப்பட்ட ரூ.25,000 கோடிக்கு மாற்றாக) பெற்றிருக்கும் நிறுவனங்கள் மகாரத்னா அந்தஸ்தைப் பெறலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்