இந்த எல்லைத் தகராறு ஆனது, 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டம் மூலமான மொழிவாரி மாநில மறுசீரமைப்புடன் தொடர்புடையது.
1950 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று உருவாக்கப் பட்டதிலிருந்து, கர்நாடகாவில் உள்ள சுமார் 865 கிராமங்கள் மகாராஷ்டிராவுடன் இணைக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கூறி வருகிறது.
1966 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதியன்று, மகாராஷ்டிராவின் வற்புறுத்தலின் பேரில், இந்த விவகாரத்தினை மதிப்பாய்வு செய்ய முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி மெஹர் சந்த் மகாஜன் தலைமையில் ஓர் ஆணையத்தினை மத்திய அரசு அமைத்தது.
பெலகாவி (அப்போது பெல்காம் எனப்பட்டது) மீதான மகாராஷ்டிராவின் உரிமைக் கோரலை மகாஜன் ஆணையம் நிராகரித்தது.
ஆனால் சில பிரதேசங்களை பரிமாறிக் கொள்ள அது பரிந்துரைத்தது.
ஜாட், அக்கல்கோட் மற்றும் சோலாப்பூர் உட்பட மகாராஷ்டிராவில் உள்ள சுமார் 247 கிராமங்கள் / இடங்கள் கர்நாடகாவின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்றும், கர்நாடகாவில் நிப்பானி, கானாபூர் மற்றும் நந்தகாட் உட்பட 264 கிராமங்கள் / இடங்கள் மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாக மாற்றப் பட வேண்டும் என்றும் அந்த ஆணையம் கூறியது.
இந்தப் பரிந்துரைகளை மகாராஷ்டிரா அரசு நிராகரித்தது.