TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா சிறப்புப் பொதுப் பாதுகாப்பு (MSPS) சட்டம், 2024

July 22 , 2024 10 hrs 0 min 33 0
  • நகர்ப்புறங்களில் 'நக்சலிசத்தின் அச்சுறுத்தலை' தடுப்பதை இந்தச் சட்டம் ஒரு பெரும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத்தின் விதிகள் ஆனது, பிடியாணை அற்ற மற்றும் பிணை ஆணையைப் பெற முடியாத சில குற்றப் பதிவுகளைக் கொண்ட எந்தவொரு அமைப்பையும் ‘சட்ட விரோதமானது’ என அறிவிப்பதற்கு அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் ஆனது பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் குறித்தத் தகவல்களை தெரிவிக்காமலேயே தனிநபர்களைப் பிடியாணை இன்றி கைது செய்ய வழி வகுக்கும்.
  • மாவோயிஸ்டு அமைப்புகளால் பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டங்களை அமல்படுத்தி உள்ளன.
  • 1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) ஆனது நக்சலிசம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தச் சட்டம் ஆனது குறிப்பிட்ட அமைப்புகளை ‘சட்டவிரோத அமைப்புகள்’ என வகைப் படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • இரண்டு சட்டங்களும் சற்று ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாகும்.
  • இருப்பினும், MSPS சட்டத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படும் அல்லது அவ்வாறு நியமிக்கப்பட தகுதி பெற்ற மூன்று நபர்கள் கொண்ட ஆலோசனைக் குழு ஆனது இந்த உறுதிப்படுத்தல் செயல்முறையை மேற்பார்வையிடும்.
  • ஆனால் UAPA சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் அரசின் அறிவிப்பைச் சரிபார்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்