TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா - பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா

January 8 , 2020 1658 days 971 0
  • மகாராஷ்டிரா மாநிலமானது தனது நிலப் பதிவுகளை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் (Pradhan Mantri Fasal Bima Yojana - PMFBY) இணைய தளத்துடன் ஒருங்கிணைத்த நாட்டின் முதலாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • நிலப் பதிவுகளை PMFBY உடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தில் நிலப் பதிவு விவரங்கள் ஆன்லைனில் கிடைப்பதால் நேரத்தை மிச்சப்படுத்தவும் கோப்புகளைப் பிற்சேர்க்கவும் உதவுகின்றது.

PMFBY பற்றி

  • PMFBY என்பது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்.
  • இது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டமானது மத்திய வேளாண் மற்றும் விவசாயி நல அமைச்சகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் காரீப் பயிர்களுக்கு 2% காப்பீட்டுத் தொகையும் ராபி பயிர்களுக்கு 1.5% காப்பீட்டுத் தொகையும் விவசாயிகளால் செலுத்தப்படுகின்றது.
  • விவசாயிகளால் செலுத்தப்படும் வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையானது 5% ஆக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்