TNPSC Thervupettagam
August 3 , 2021 1087 days 591 0
  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையிலான மகாராஷ்டிர பூஷன் தேர்வுக் குழுவானது புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களை இந்த மதிப்புமிக்க விருதிற்கு வேண்டி ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
  • ஆஷா போன்ஸ்லே இந்தித் திரைப்படத்துறையின் பின்னணி பாடல்களுக்கு மிகவும் பிரபலமானவராவார்.
  • ஆஷா போன்ஸ்லே அவர்கள் இசை வரலாற்றிலேயே அதிகளவில் பாடல்கள் பதிவு செய்யப் பட்ட இசைக்கலைஞர் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அரசானது இவருக்கு 2000 ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதினையும், 2008 ஆம் ஆண்டில் பத்ம விபூசன் விருதினையும் வழங்கி கௌரவித்தது.
  • இவர் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் சகோதரி ஆவார்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்