சுதந்திரத்திற்குப் பிறகு, பம்பாய் (மும்பை) பகுதியானது மராத்தி, குஜராத்தி, கொங்கனி மற்றும் கட்ச்சி ஆகிய மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.
இது 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும், விரைவில் இது குழப்பம் மற்றும் துயரத்திற்கு வழிவகுத்தது.
பம்பாய் மக்களிடையே இருந்த மொழி வேறுபாடுகள் அம்மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து, பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது.
எனவே இந்திய அரசானது பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தினை இயற்றியது.
1960 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை இரண்டு வெவ்வேறு மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன.