பொதுத்துறை கடன் வழங்கீட்டு நிறுவனங்களிடையே மொத்தப் பண மாற்றம் மற்றும் வைப்புத் திரட்டலின் அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிர வங்கி கடந்த நிதியாண்டில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.
இது 2024 ஆம் நிதியாண்டில் மொத்தப் பண மாற்றத்தில் (உள்நாட்டில்) 15.94 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
அதைத் தொடர்ந்து 13.12 சதவீத வளர்ச்சியுடன் பாரத் ஸ்டேட் வங்கி (SBI) இடம் பெற்று உள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கியின் மொத்தப் பண மாற்றங்கள் (வைப்பு மற்றும் முன்பணம்) 16.7 மடங்கு உயர்ந்து சுமார் 79,52,784 கோடி ரூபாயாக இருந்ததோடு இது மகாராஷ்டிரா வங்கியின் (BoM) முழு அளவின் அடிப்படையில் 4,74,411 கோடி ரூபாயாக இருந்தது.
2024 ஆம் நிதியாண்டில் 15.66 சதவீத வளர்ச்சியுடன், வைப்புத் திரட்டலின் வளர்ச்சியின் அடிப்படையில் BoM தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
அதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கி (11.07 சதவீதம்), பேங்க் ஆஃப் இந்தியா (11.05 சதவீதம்) மற்றும் கனரா வங்கி (10.98 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
12 பொதுத் துறை வங்கிகளில், இந்த நான்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே 2023-24 ஆம் நிதியாண்டில் வைப்புத் தொகையில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்ய இயலும்.