நாக்பூரைச் சேர்ந்த ரவுனக் சத்வானி 12 வயதில் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை (International Master-IM) வென்றுள்ளார்.
ரவுனக் சத்வானி மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளைய சர்வதேச மாஸ்டராவார். மேலும் நாக்பூரின் இரண்டாவது சர்வதேச மாஸ்டராவார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டமானது அறிவுக்கூர்மையுடைய செஸ் விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் பட்டமாகும். இது ஓர் வாழ்நாள் சாதனை பட்டமாகும்.
சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வெல்ல ஓர் செஸ் விளையாட்டு வீரர் 3 விதிகளைக் கடக்க வேண்டும். மேலும் 2400 “எலோ“ புள்ளிகள் ('Elo' points) எனும் சர்வதேச தரவரிசையைக் கொண்டிருக்க வேண்டும்.