TNPSC Thervupettagam

மகாராஷ்டிராவின் புதிய கல்விக் கொள்கை 2025

April 24 , 2025 17 hrs 0 min 32 0
  • மகாராஷ்டிரா மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆனது, தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில், மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில், இந்தி மொழியை மூன்றாம் மொழியாக கற்பிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையுடன் (NEP) ஒத்திசைந்துள்ளது.
  • NEP கொள்கையின் படியான ஒரு புதியப் பாடத் திட்டம் ஆனது, 2025-26 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும்.
  • இந்தக் கொள்கையானது 2, 3, 4 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு 2026-27 ஆம் ஆண்டிலும், 5, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு 2027-28 ஆம் ஆண்டிலும், மற்றும் 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 2028-29 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
  • இதுவரையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் மராத்தி மற்றும் ஆங்கிலம் மொழிகள் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • மராத்திய மொழியானது தற்போதைய பாடத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், ​​25 ஆண்டுகளுக்கு முன்னதாக 2000 ஆம் ஆண்டில் ஆங்கிலம் ஒரு கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்போதைய நிலவரப்படி, அரசுப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பிலிருந்து இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • 5, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது.
  • 8 ஆம் வகுப்பு முதல், இந்தி மொழி பயில்வதைத் தொடரலாம் அல்லது அதற்குப் பதிலாக சமஸ்கிருதம் அல்லது வேறொரு அயல் மொழியைத் தேர்வு செய்யலாம்.
  • மகாராஷ்டிரா மாநிலக் கல்வி வாரியம் ஆனது வங்காளம், தமிழ், கன்னடம், குஜராத், உருது, இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்மொழி வழிப் பள்ளிகளை நடத்துகிறது என்பதோடு மேலும், இவற்றுக்கானப் பாடப் புத்தகங்கள் பால் பாரதி அமைப்பினால் உருவாக்கப்படுகின்றன.
  • இந்தப் பள்ளிகள் அனைத்திலும், மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் ஆனது அம்மாநிலத்தின் பயிற்று மொழியை முதன்மை மொழியுடன் சேர்த்து கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்