மகாராஷ்டிராவில் உள்ள தனியார் நிலப்பகுதியில், நகர்ப்புற ஏழைகளுக்கு 30,000 மலிவு வீடுகள் கட்ட , வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs ) அனுமதி அளித்துள்ளது.
பல்துறை சார்ந்த மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (Central Sanctioning and Monitoring Committee, CSMC) செயலாளர், துர்காசங்கர் மிஸ்ரா, இதற்கான ஒப்புதலை வழங்கினார்.
இதன்படி, ‘நகர்ப்புற பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் ’Pradhan Mantri Awas Yojana (Urban) கீழ் , 450 கோடி ரூபாய் மத்திய நிதி உதவியளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.