மேற்கு தொடர்ச்சி மலையில் பருவநிலை மாற்றத்தினைக் குறித்த சில புதிய நுண்ணறிவுகளை வழங்கச் செய்யும் ஒரு அரிய தாழ்மட்ட பசால்ட் பீடபூமியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பீடபூமியில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 24 வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 76 வகையான தாவரங்கள் மற்றும் புதர்ச் செடிகள் உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள் உள்ளன.
இது மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மஞ்சரே கிராமத்தில் கண்டு பிடிக்கப் பட்ட நிலையில் இந்தப் பீடபூமியானது இப்பகுதியில் அடையாளம் காணப் பட்ட நான்காவது வகை பீடபூமியாகும்.
முந்தைய மூன்று பீடபூமிகள் என்பது, உயர் மற்றும் தாழ்மட்ட செம்மண் பாறை மற்றும் அதிக உயரத்தில் உள்ள பாசால்ட் பாறை வகையிலான பீடபூமிகள் ஆகும்.