அமராவதியில் உள்ள மங்களகிரி நகரத்தில் 3 நாட்கள் நடைபெறும் 2018 ஆம் ஆண்டிற்கான மகிழ்ச்சியான நகரங்கள் மாநாட்டினை (Happy Cities Summit 2018) ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநில அரசானது இம்மாநாட்டினை நடத்துகின்றது. இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industries -CII), மற்றும் சிங்கப்பூரின் வாழத்தகு நகரங்களுக்கான மையம் (Centre for Liveable Cities) ஆகியவை இம்மாநாட்டின் பங்களிப்பாளர் அமைப்புகளாகும்.
மாநிலத்தில் மகிழ்ச்சிக் குறியீட்டின் (Happiness Index) அளவினை அதிகரிப்பதன் மீதான அரசினுடைய முயற்சியின் வரிசையில் ஒத்திசைந்து, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதன் முறையாக மகிழ்ச்சியான நகரங்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
குடிமக்களை மையப்படுத்திய ஆளுகை (citizen-centric governance), வாழத்தகு சமுதாயங்கள் (liveable communities), தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் (clean and healthy environment) மற்றும் துடிப்பான பொருளாதாரம் (vibrant economies) ஆகியவை இம்மாநாட்டின் நான்கு மைய கருப்பொருட்களாகும்.