TNPSC Thervupettagam

மகேந்திரகிரி உயிர்க்கோளக் காப்பகம்

April 2 , 2021 1208 days 826 0
  • ஒடிசா அரசு, அந்த மாநிலத்தின் தெற்குப் பகுதியிலுள்ள மகேந்திரகிரியில் அம்மாநிலத்தின் இரண்டாவது உயிர்க் கோளக் காப்பகத்தை அமைப்பதற்காக முன்மொழிந்துள்ளது.
  • சிம்லிபால் உயிர்க்கோளக் காப்பகமானது ஒடிசாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம் ஆகும்.
  • அது 1996 ஆம் ஆண்டில் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
  • அறிவிக்கப்பட உள்ள இந்த மகேந்திரகிரி உயிர்க்கோளக் காப்பகம் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்த கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களை உள்ளிட்ட பகுதி வரை பரவியுள்ளது.
  • மகேந்திரகிரி மலையின் சூழலியலமைவு தென் இந்தியா மற்றும் இமயமலையின் தாவரம் மற்றும் விலங்கினங்களுக்கு இடைப்பட்ட ஓர்  இடைநிலைப் பகுதியாக உள்ளது.
  • மகேந்திரகிரியில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுவைச் சேர்ந்த (PVTG - particularly vulnerable tribal group) சௌரா இனத்தவர் மற்றும் காந்தா இனத்தவர் போன்ற பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் படி (IUCN), ஒடிசாவிலுள்ள அச்சுறுத்தல் நிலையில் உள்ள மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களின் 41 இனங்களில் 29 இனங்கள் அந்த உயிர்க் கோளக் காப்பகப் பகுதியில் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்