"மக்கக் கூடிய" நெகிழிப் பொருட்களை வணிகமாக்குவதற்காக 1.15 கோடி ரூபாய் தொடக்க நிறுவனக் கடன் ஆனது சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை அகற்ற முயல்கிறது.
தொடக்க நிறுவனமானது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு ஒரு மாற்றுத் தீர்வை "மக்கக் கூடிய நெகிழிப் பொருட்களின் முன்மாதிரி" வடிவில் கொண்டு வந்துள்ளது.
இந்தப் பொருள் ஆனது மண்ணில் உரம் போன்று சிதைவுறுவதால் இது சுற்றுச்சூழலை பாதிக்காது.
இந்தக் கலவையானது வெப்பத்தினால் இழக்கக்கூடிய நெகிழி-ஸ்டார்ச்-கிளிசரின் மற்றும் சில இரசாயன மாற்றங்கள் ஆகியவற்றினைக் கொண்ட தனித்துவம் மிக்க ஒரு கலவையாகும்.
மேலும் இது அந்தப் பொருளுக்கு அதிக வலிமையை வழங்குகின்றது.
பட்டியலிடப்பட்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவை 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.