ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லா 18வது மக்களவையின் சபாநாயகராக குரல் வாக்கெடுப்பு மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு, மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவுக்கும், கேரளாவின் மாவேலிக்கராவில் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் என்பவருக்கும் இடையே போட்டி திகழ்ந்தது.
மக்களவை சபாநாயகர் என்பவர் அவையின் அரசியலமைப்பு மற்றும் சம்பிரதாயத் தலைவர் ஆவார்.
அவர் பாராளுமன்றத்தின் மிக அவசியத் தேவைகள் மற்றும் அதன் செயல்பாடுகளின் செயல்திறனில் ஈடுபாடு செலுத்துவார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுப்பதற்கு 93வது சட்டப்பிரிவு விதிகளை வழங்குகிறது.
மக்களவை உறுப்பினர்கள் ஒரு சாதாரணப் பெரும்பான்மையின் கீழ், தங்களது தலைமை அதிகாரியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
புதிதாக அமைக்கப்படும் மக்களவையில் பொதுவாக சபாநாயகர் தேர்தல் தான் முதல் அலுவல் ஆகும்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இடைக்கால சபாநாயகர் இந்தச் செயல்முறையை மேற்பார்வையிடுகிறார்.
மக்களவையின் 72 ஆண்டுகளில், சபாநாயகர் பதவிக்கான தேர்தல் மூன்று முறை மட்டுமே - அதாவது 1952, 1967 மற்றும் 1976 – ஆகிய ஆண்டுகளில் மட்டுமே நடைபெற்று உள்ளது.
மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு ஒருவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது இது ஆறாவது முறையாகும் என்பதோடு தொடர்ந்து இரண்டாவது முறையாக அப்பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது இது ஐந்தாவது முறையாகும் என்பது மிக குறிப்பிடத் தக்கது.