TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தலில் புரு சமூகம்

May 2 , 2024 236 days 379 0
  • திரிபுராவில் மீள்குடியேறிய புரு சமூகத்தினைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் நிரந்தர மீள் குடியேற்றத்திற்குப் பிறகு முதல் முறையாக தற்போது மக்களவைத் தேர்தலில் வாக்களித்தனர்.
  • மத்திய அரசு மற்றும் திரிபுரா மற்றும் மிசோரம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட ஒரு நான்கு தரப்பு ஒப்பந்தத்தின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் இது மேற்கொள்ளப் பட்டது.
  • அவர்கள் இதற்கு முன்பு திரிபுராவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றுள்ளனர்.
  • முந்தைய மக்களவைத் தேர்தலில், 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் புரு சமூகத்தின் புலம் பெயர்ந்தோர் முகாம்களில் அமைந்த மையங்களிலும், 2019 ஆம் ஆண்டில் மிசோரமின் மாமித் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாக்குச் சாவடி மையங்களிலும் அவர்கள் வாக்களித்தனர்.
  • 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற இன மோதல்களைத் தொடர்ந்து, ரியாங் என்றும் அழைக்கப்படும் சுமார் 32,000 ப்ரு இனத்தவர்கள், மிசோரமிலிருந்து தப்பி திரிபுராவில் தஞ்சம் புகுந்தனர்.
  • இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, 2018 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று ஒரு நாற்கர (நான்கு தரப்பு) ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • திரிபுராவில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களில் உள்ள மொத்தம் 32,876 பேரை உள்ளடக்கிய 5,407 புரு சமூகத்தினைச் சேர்ந்த குடும்பங்களை மிசோரமிற்குத் திருப்பி அனுப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

J PADMANABAN May 02, 2024

Sir/Madam, Pls confirm the year of agreement signed on 2028 (2018)

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்