TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024

June 10 , 2024 170 days 236 0
  • இந்திய தேர்தல் ஆணையம் ஆனது 543 மக்களவைத் தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை அறிவித்தது.
  • 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு தேர்தலில் 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
  • பாஜக கட்சி 272 பெரும்பான்மை நிலையை இழந்து, அந்தக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
  • தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
  • திருச்சூர் மக்களவைத் தொகுதியில் (சுரேஷ் கோபி) வெற்றி பெற்று முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் கேரளாவில் தனது ஈடுபாட்டினைத் தொடங்கியது.
  • 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் அதன் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பதிவு செய்ததன் மூலம், INDIA கூட்டணி வியக்கத்தக்க வகையில் பெரு மகத்தான வெற்றிகளை (235) பெற்றது.
  • ஒட்டு மொத்தமாக, பா.ஜ.க. தனது உறுப்பினர் இடப் பங்கில் 21% சரிவினை எதிர் கொண்டது என்ற நிலையில் காங்கிரஸ் 90% முன்னேற்றத்தினைப் பதிவு செய்துள்ளது.
  • பா.ஜ.க. கட்சியின் சங்கர் லால்வானி இந்தூர் மக்களவைத் தொகுதியில் 100877 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
  • பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் பகுதியில் முன்னர் பதிவான அதிகபட்ச நோட்டா ('மேற்கண்ட எவரும் இல்லை' விருப்பத் தேர்வு) எண்ணிக்கையினை முறியடித்து, அதே இந்தூர் தொகுதியில் 2.18 லட்சத்திற்கும் அதிகமான நோட்டா வாக்குகள் பதிவானது.
  • மகாராஷ்டிராவின் மும்பை வடமேற்குத் தொகுதியில், சிவசேனா (SS) வேட்பாளர் ரவீந்திர தத்தாராம் வைகர், SS (UBT) கட்சி வேட்பாளர் அமோல் கஜானன் கிர்த்திகரை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்