மக்களவையின் முதல் பெண் பொது செயலாளர்
November 29 , 2017
2581 days
1145
- இந்திய குடிமையியல் ஆட்சிப் பணியாளரான சிநேஹலதா ஸ்ரீவத்சவா மக்களவையின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் மக்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளர் (secretary General) ஆவார்.
- தற்போது மக்களவை பொது பொதுச் செயலாளராக பணியாற்றி வரும் அனுப் மிஷ்ராவின் பதவிக்காலம் முடிந்த பிறகு இவர் பொறுப்பேற்பார்.
- இவர் தற்போது மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
- மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பொதுச் செயலாளர் பதவியானது கேபினேட் செயலாளருக்கு இணையான தகுதி உடையது.
- S.ரமா தேவி மாநிலங்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளராக ஏற்கனவே பணி புரிந்துள்ளார்.
Post Views:
1145