TNPSC Thervupettagam

மக்களாட்சிக் குறியீடு

January 23 , 2020 1676 days 810 0
  • பொருளாதார நுண்ணறிவுப்  பிரிவானது 2019 ஆம் ஆண்டிற்கான மக்களாட்சிக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டின்படி, உலகில் நான்கு வகையான ஆட்சியமைப்புகள் உள்ளன. அவை – முழுமையான மக்களாட்சி, குறைபாடு கொண்ட மக்களாட்சி, கலப்பின மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி என்பதாகும்.
  • இந்தக் குறியீட்டில் நார்வே நாடானது முதலிடம் பிடித்தது.
  • நார்வேயைத் தொடர்ந்து இதில் ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் முறையே இரண்டாமிடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
  • முந்தையத் தர வரிசையுடன் ஒப்பிடும்போது இந்தியாவானது 10 இடங்கள் பின்தங்கி 51வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
  • இந்தியாவானது குறைபாடு கொண்ட மக்களாட்சி எனும் பிரிவில் வங்க தேசத்துடன் சேர்த்துப் பட்டியலிடப் பட்டிருக்கின்றது.
  • முழுமையான மக்களாட்சி நாடுகளில் ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும்.
  • அமெரிக்க நாடானது இந்தியாவைப் போலவே ஒரு "சிக்கலான (குறைபாடுள்ள) மக்களாட்சி" நாடாகும்.
  • சீனாவும் வட கொரியாவும் “சர்வாதிகார ஆட்சிகள்” என்று  வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • பாகிஸ்தான் ஒரு "கலப்பின மக்களாட்சி" என்று வகைப்படுத்த ப்பட்டுள்ளது.

இது பற்றி

  • இது 165 தனி நாடுகளுக்காகவும் 2 நிலப் பகுதிகளுக்காவும் உலக மக்களாட்சியின்  நிலைமை பற்றிய ஒரு காட்சிப் படத்தை தருகின்றது.
  • இந்தக் குறியீடு 5 கூறுகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றது.
    • தேர்தல் முறை மற்றும் பன்முகத்தன்மை
    • குடிமையியல் உரிமைகள்
    • அரசின் செயல்பாடு
    • அரசியல் பங்கேற்பு
    • அரசியல் கலாச்சாரம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்