TNPSC Thervupettagam

மக்களின் பல்லுயிர்ப்பெருக்கப் பதிவேடு – தழகரை

July 11 , 2024 136 days 283 0
  • ஆலப்புழாவின் தழகரை பஞ்சாயத்தானது, விரிவான மக்களின் பல்லுயிர்ப்பெருக்கப் பதிவேட்டைப் புதுப்பித்து வெளியிடும் கேரளாவில் முதன்மையான மற்றும் முதல் கிராமப் பஞ்சாயத்து என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
  • இந்த உள்ளாட்சி அமைப்பு ஆனது 38 புனித தோப்புகள், 10 நெல் வயல்கள் மற்றும் 35 குளங்களைக் கொண்டுள்ளது.
  • PBR பதிவேட்டின் முதல் தொகுதியானது, 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது எனினும் அதில் சில முக்கியத் தகவல்கள் இடம் பெறவில்லை.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் தொகுதியானது அனைத்து 21 வார்டுகளிலும் உள்ள பல்லுயிர்ப் பெருக்கம் பற்றிய விரிவான அறிக்கையாக உள்ளது.
  • அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் PBR பதிவேட்டின் முதல் தொகுதியை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலம் கேரளாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்