தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகமானது G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினை சிறப்பித்துக் காட்டும் வகையிலான " மக்களுக்கான G20 இணையப் புத்தகம்" என்ற மின்னணுப் புத்தகத்தினை வெளியிட்டு உள்ளது.
மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகமானது G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினைப் பற்றிய விரிவான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.
முதல் பகுதியானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற G20 அமைப்பின் உச்சி மாநாட்டினை உள்ளடக்கியதோடு மேலும் G20 அமைப்பின் கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளையும் விளக்குகிறது.
இரண்டாம் பகுதியானது, ஈடுப்பாட்டுக் குழுக் கூட்டங்களோடுச் சேர்த்து, அரசுப் பிரதிநிதி மற்றும் நிதி சார் செயல்முறைகளுக்கான பல்வேறு பணிக் குழுக்கள் நடத்திய கூட்டங்கள் பற்றிய விவரச் சுருக்கத்தினை வழங்குகிறது.
மூன்றாவது பகுதியில் G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தினை மக்கள் இயக்கமாக மாற்றிய ஜன்-பாகிதாரி (பொது பங்கேற்பு) நிகழ்வுகளைக் எடுத்துரைக்கும் வகையிலான புகைப்பட விளக்கக் கட்டுரை இடம் பெற்றுள்ளது.