TNPSC Thervupettagam

மக்களுக்கான பல்லுயிர்த் தன்மையின் பதிவேடு - தமிழ்நாடு

October 21 , 2018 2098 days 873 0
  • தமிழ்நாடு அரசானது மக்களுடைய பல்லுயிர்த் தன்மைக்கான பதிவேட்டினை (People’s Biodiversity Registers - PBR) இணைய தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்குத் திட்டமிடுகின்றது.
  • இது தனது மக்களுடைய பாரம்பரிய அறிவையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகும்.
  • மதிப்புமிக்க இயற்கை வளங்களின் இருப்பை நேரடியாக இணைய தளத்தில் வெளியிடுவது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.
  • 2002ம் ஆண்டின் தேசிய பல்லுயிர் பெருக்கச் சட்டத்தின்படி தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்புப் பட்டியலை வெளியிடுவது கட்டாயமாகும்.
  • தாவரங்கள், வன உயிர்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைத் தவிர இப்பதிவேடு விவசாய நிலம், தீவனப் பயிர்கள், நில அமைப்பு, நீரமைப்பு மற்றும் மக்கள் தொகை அமைப்பு ஆகிய தகவல்களையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்