தமிழக முதல்வர் அவர்கள், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மக்கள் தாக்கல் செய்யும் குறைகள் அல்லது மனுக்களை 30 நாட்களுக்குள் தரமான முறையில் தீர்த்து வைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பல்வேறு துறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைச் சேகரிப்பதற்காக கட்டம் வாரியாக சிறப்பு முகாம்கள் இதன் படி நடத்தப் படும்.
முதல் கட்டமாக மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.