TNPSC Thervupettagam

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் தாக்கம்

March 18 , 2024 251 days 649 0
  • மக்களைத் தேடி மருத்துவம் (MTM) எனும் மக்களின் வீடு தேடி மருத்துவ சேவையினை வழங்கும் திட்டம் ஆனது, கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் பட்டியலிடப் பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் போன்ற மிகவும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினரைச் சென்றடைந்துள்ளது.
  • நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய தொற்றா நோய்களுக்கு (NCD) இந்தத் திட்டத்தின் கீழ் மிகவும் அதிகளவில் சிகிச்சையளிக்கப் பட்டாலும், புற்றுநோய் பரிசோதனைப் பரவல் மிகவும் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில், 4,155 (60%) பேர் கிராமப் புறங்களையும், 2,701 (40%) பேர் நகர்ப்புறங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 78.84% பேர் MTM திட்டம் பற்றி அறிந்திருந்தனர் என்பதோடு இதில் 73% பேர் மகளிர் சுகாதாரத் தன்னார்வச் சேவை வழங்குநரின் (WHV) சேவையினைப் பெற்றுள்ளனர்.
  • உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனையில், இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 81.25% பேர் உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்ற நிலையில் அவர்களில் சுமார் 93.8% பேர் கடந்த ஆண்டில் பரிசோனைக்கு உட்படுத்தப் பட்டனர்.
  • கடந்த ஆண்டில் பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 73.6% பேர் MTM திட்டத்தின் கீழ் பரிசோதனை வசதியினைப் பெற்றனர்.
  • ஆண்களுடன் (79%) ஒப்பிடும் போது, பெண்களின் மத்தியில் அதிக விகிதத்தில் (82.6%) பரிசோதனை செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதோடு கடந்த ஆண்டில் MTM திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக எண்ணிக்கையில் (சுமார் 75.1% மற்றும் 71.2%) பரிசோதனை செய்துள்ளனர்.
  • MTM திட்டத்தின் கீழான உயர் இரத்த அழுத்தத்திற்கான பரிசோதனை ஆனது நகர்ப் புறங்களில் 61.5% ஆகவும், கிராமப்புறங்களில் 82.9% ஆகவும் இருந்தது.
  • இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சுமார் நான்கு சதவீதம் பேர் மட்டுமே வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
  • வெறும் 11.06% பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கும், 14.24% பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்குமான பரிசோதனையினை செய்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்