தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 05 அன்று மக்களுக்கு வீடு தேடி மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக வேண்டி “மக்களைத் தேடி மருத்துவம்” எனும் ஒரு சுகாதார நலத் திட்டத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டமானது இதே சமயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P.K. சேகர் பாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரால் சென்னையிலும் தொடங்கி வைக்கப்பட்டது.