மிகவும் தாமதப் படுத்தப்பட்டுள்ள பத்தாண்டு கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்கும் பணியானது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட உள்ளது.
இதன் தரவுகளானது 2026 ஆம் ஆண்டில் அறிவிக்கப் படும்.
இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது 1951 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள முடியவில்லை.
இதனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சுழற்சி மாற வாய்ப்புள்ளது.
எனவே, அடுத்தக் கணக்கெடுப்பு சுழற்சி காலம் 2025-2035 ஆகவும், அதற்கு அடுத்ததாக 2035-2045 ஆகவும் இருக்கும்.
இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது குடிமக்களிடம் 31 கேள்விகள் கேட்கப் படும்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவு செய்யப் படுகிறது என்பதோடு முதல் கணக்கெடுப்பு ஆனது 1872 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆனது, 1951 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டதோடு, கடைசியாக 2011 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் தரவுகளின்படி, சில முக்கியத் தரவுகள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையானது 121 கோடி, பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள், எழுத்தறிவு விகிதம் 74.04% ஆகியன ஆகும்.
மக்கள்தொகை வளர்ச்சியானது 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் 17.64% ஆக இருந்தது.