இந்தியக் குத்துச் சண்டை வீரர்கள், ஈரானின் சாபஹார் நகரில் நடைபெற்ற மக்ரான் கோப்பை குத்துச் சண்டைச் சுற்றுப் பயணப் போட்டியில் ஒரு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் உள்பட 8 பதக்கங்களை வென்றனர்.
இந்தியாவிற்கான ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மூன்று முறை இளையோர் தேசியப் போட்டியின் வெற்றியாளரான அரியானாவின் தீபக் வென்றார்.
P. லலிதா பிரசாத் (52 கிலோ கிராம்), மனீஷ் கௌசிக் (60 கிலோ கிராம்) துர்யோதன் சிங் நேகி (69 கிலோ கிராம்), சஞ்சீத் (91 கிலோ கிராம்) மற்றும் சதீஸ்குமார் (91 கிலோ கிராமிற்கும் அதிகம்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ரோகித் டோகாஸ் மற்றும் மஞ்சீத் சிங் பங்கல் முறையே 64 கிலோகிராம் மற்றும் 75 கிலோகிராம் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.