இந்தியாவின் செவ்வாய்க் கிரகச் சுற்றுக் கலமானது, கோள்களுக்கிடையேயான ஆய்வுப் பணியில் மேற்கொண்ட 8 ஆண்டுகள் நீண்ட நெடும் ஆய்வுப் பணியை நிறைவு செய்ததையடுத்து ஓய்வு பெற்றுள்ளது.
இது 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டு, 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
இது வெறும் 6 மாதங்கள் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது, என்றாலும் 8 நீண்ட நெடும் ஆண்டுகள் காலத்திற்கு இது செயல்பாட்டில் இருந்தது.
இந்தியாவின் மங்கள்யான் கலத்திற்கு முன்னதாக, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் மட்டுமே செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்தன.
மேற்பரப்பு புவியியல், புற வடிவவியல், வளிமண்டல நடவடிக்கைகள், மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் வளிமண்டல வெளியேற்றச் செயல்முறை போன்றவை உட்பட செவ்வாய்க் கிரக நிலப்பரப்புகளை ஆய்வு செய்ய உதவும் வகையிலும் மங்கள்யான் ஒரு மாபெரும் மைல்கல் சாதனையாகும்.
மங்கள்யான் இந்தப் பணிக்காக பின்வரும் 5 கருவிகளைப் பயன்படுத்தியது.
செவ்வாய்க் கிரக வண்ண ஒளிப்படக்கருவி (MCC)
வெப்ப அகச்சிவப்பு உருவரைவு நிறமாலைமானி (TIS)
செவ்வாய்க் கிரகத்திற்கான மீத்தேன் உணர்வி (MSM)
செவ்வாய்க் கிரக வெளிப்புற நடுநிலை இயைபு மதிப்பீட்டுக் கருவி (MENCA)