கேரள கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (Kerala Infrastructure Investment Fund Board - KIIFB) அயல்நாட்டுச் சந்தையில் இருந்து நிதியினைப் பெறுவதற்காக மசாலாப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
மசாலாப் பத்திரங்களுக்காக சந்தைச் செயல்பாடுகளில் பங்கெடுத்துள்ள ஒரு முதலாவது இந்திய மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
மசாலாப் பத்திரம் என்பது ஒரு
ரூபாய் அடிப்படையிலான பத்திரம்
அமெரிக்க டாலரில் திருப்பிச் செலுத்தக் கூடியது
ஆங்கிலச் சட்டத்திற்கு உட்பட்டது.
ரூபாய் அடிப்படையிலான பத்திரங்கள் என்பது வெளிநாட்டுச் சந்தையில் இருந்து நிதியினை இந்திய ரூபாயில் பெறுவதினைக் குறிக்கின்றது.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக இந்தப் பத்திரங்களிலிருந்து வரும் நிதியினைப் பயன்படுத்த கேரளா முடிவு செய்துள்ளது.
KIIFB ஆனது 312 மில்லியன் டாலர் (ரூ.2150 கோடி) மதிப்பிலான நிதியினைப் பெறுவதற்காக 17-05-2019 ஆம் தேதியன்று இலண்டன் பங்குச் சந்தையில் மசாலாப் பத்திரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
இலண்டன் பங்குச் சந்தை உலகளவில் மசாலாப் பத்திரங்களின் ஒரு மிகப்பெரிய மையமாக விளங்குகின்றது. இது தனது சந்தையில் இதே போன்ற ரூபாய் அடிப்படையிலான 49 மசாலாப் பத்திரங்களைப் பட்டியலிட்டுள்ளது.